இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கும் இலங்கை கிரிக்கெட் அணிக்கும் இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டி நாளை தம்புள்ள ரன்கிரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இதில் கலந்துகொள்வதற்காக இன்று தம்புள்ளைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினர் சென்றுள்ளனர். இதன்போது இன்று நண்பகல் ஜும்ஆ தொழுகையில் கலந்துகொள்வதற்காகவே பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தம்புள்ள பள்ளிவாசவலுக்கு விஜயம் செய்துள்ளனர்.
எனினும் ஜும்ஆ தொழுகையில் கலந்துகொள்வதற்கு கலேவ பள்ளிவாசலிற்கு செல்லூமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் அதனை மீறி பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் தம்புள்ள பள்ளிவாசலுக்கு விஜயம் செய்து ஜும் தொழுகையில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.