Breaking
Sun. Dec 22nd, 2024
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் உடுவே தம்மாலோக தேரரை பிணையில் விடுவிக்குமாறு கேட்டு முன்வைக்கப்பட்டுள்ள மனு இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

சட்ட ரீதியான அத்தாட்சிப் பத்திரம் இன்றி யானையொன்றை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் உடுவே தம்மாலோக தேரர் கைது செய்யப்பட்டுள்ள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

காலஞ் சென்ற அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரரின் இறுதிக் கிரியைகளில் சந்தேகநபரான உடவே தம்மாலோக தேரரை சிறைச்சாலை அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் கலந்து கொள்ள அனுமதிக்குமாறும் கொழும்பு மேலதிக மஜிஸ்ட்ரேட் நீதவான் நிஷாந்த பீரிஸ் நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்நிலையிலேயே இவருக்கான பிணை மனு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

By

Related Post