Breaking
Tue. Mar 18th, 2025
இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் தம்மிக்க ரணதுங்க வாழைத்தோட்ட பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

சட்டத்தரணியுடன் சென்ற அவர் எதிர்வரும் 24 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுவதாக அறிவிப்பதற்காக அங்கு சென்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

துறைமுக அதிகார சபையின் தலைவர் தம்மிக்க ரணதுங்க, அண்மையில் நீதிமன்றத்திற்கு வெளியில் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியதுடன் அவர்களை செல்போனில் படம் பிடித்தார்.

இது குறித்து ஊடகவியலாளர்கள் வாழைத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். இதனையடுத்து பொலிஸ் இது குறித்து நீதிமன்றத்தில் பீ அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

By

Related Post