Breaking
Sun. Dec 22nd, 2024

மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட மூவர் இன்று கொழும்பு உயர் நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் மேன்முறையீடு செய்துள்ளனர்.

தமக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை நீக்கி விடுதலை செய்யுமாறு கொழும்பு உயர் நீதிமன்றில் குறித்த சந்தேகநபர்கள் மேன்முறையீடு செய்துள்ளனர்.

கடந்த 08ஆம் திகதி தங்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட மரண தண்டனையை நீக்கி தங்களின் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தனது சட்டத்தரணி ஊடாக கொழும்பு உயர் நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் மேன்முறையீட்டினை சமர்ப்பித்துள்ளார்.

இதேவேளை, கடந்த 20ஆம் திகதி குறித்த சந்தேகநபர்களில் மூவர், தங்களை விடுதலை செய்யுமாறு கோரி கொழும்பு உயர் நீதிமன்றில் மேன்முறையீடு செய்திருந்தனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மனை கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட துமிந்த சில்வா உள்ளிட்ட குழுவினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post