Breaking
Fri. Nov 15th, 2024

அமெரிக்க அதிபர் ஒபாமாவை தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக தாக்கிப் பேசிய பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோடிரிகோ டுட்டர்டே-வை ஒபாமா சந்தித்துப் பேசியதாக தெரியவந்துள்ளது.

லாவோஸ் நாட்டில் வியன்டியான் நகரில் 14-வது ஆசியன் மற்றும் 11-வது கிழக்கு ஆசிய மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டின்போது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோடிரிகோ டுட்டர்டே-வை கடந்த 6-ம் தேதி அமெரிக்காவின் லாவோஸ் நகரில் சந்தித்துப் பேச முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த சந்திப்பின்போது, பிலிப்பைன்ஸ் நாட்டில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் விவகாரத்தில் நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ரோடிரிகோ டுட்டர்டே-விடம் ஒபாமா கேள்வி எழுப்புவார் என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் குறிப்பிட்டிருந்தனர்.

இதுதொடர்பாக செய்திகள் வெளியானதும் பிலிப்பைன்ஸ் அதிபர் ரோடிரிகோ டுட்டர்டே பொங்கி எழுந்தார். அந்நாட்டு ஊடகங்களுக்கு பேட்டியளித்த அவர், ஒபாமாவை சகட்டுமேனிக்கு திட்டித் தீர்த்தார்.

’ஒபாமா என்ன பெரிய கொம்பனா?, நான் ஒன்றும் அமெரிக்காவுக்கு தலையாட்டி பொம்மை இல்லை. நான் இறையாண்மை மிக்க ஒரு நாட்டின் அதிபர். என்நாட்டு மக்களை தவிர வேறு யாருக்கும் நான் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. பெட்டை நாயின் மகனே.., (Son of a bitch) உன்னை (ஒபாமா) சபித்து விடுவேன்’ என்று அவர் பொறிந்துத் தள்ளினார்.

ஜி-20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஒபாமா சீனா சென்றிருந்தபோது ரோடிரிகோ டுட்டர்டே அளித்த இந்த பேட்டி தொடர்பான செய்திகள் உலக ஊடகங்களில் வெளியாகின.

இதையடுத்து, பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோடிரிகோ டுட்டர்டே-வை அமெரிக்க அதிபர் ஒபாமா சந்தித்துப் பேச முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் அறிவித்துள்ளார்.

இந்த சந்திப்புக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில் தென்கொரியா அதிபர் பார்க் கெவ்ன் ஹே-வை அதிபர் ஒபாமா சந்திப்பார் என வெள்ளை மாளிகை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில், ஆசியான் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள் பங்கேற்ற விருந்து நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் பிலிப்பைன்ஸ் அதிபர் ரோடிரிகோ டுட்டர்டே-வும்ம் சந்தித்துப் பேசியதாகவும், விருந்து முடிந்ததும் இருவரும் கடைசியாக ஒன்றாக வெளியே வந்ததாகவும் மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

By

Related Post