– அஸ்ரப் .ஏ சமத் –
லங்கா எக்ரோ பொரோசிசிங் தனியார் லிமிட்டெட் நிறுவனத்திற்கு எஸ்.எல்.ஏ மற்றும் ஜ.எஸ்.ஓ 22000 தரச்சான்றிதழ் வழங்கப்பட்டது. இந் நிகழ்வு 18ஆம் திகதி கொழும்பு சினமன் கிராண்ட் கோட்டலில் நடைபெற்றது.
இக் கம்பனி 1970 களில் ஒரு அரிசி, மா அரைக்கும் ஆலையாக ஆரம்பிக்கப்பட்டது. தற்பொழுது வத்தளையில் மாபெரும் ஏற்றுமதி உள்ளுர் பருப்பு, சோளம், குரக்கன் போன்ற பல வா்த்தக தானியங்களை கனடா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் உள்ளுரிலும் “அங்கா் ” சின்னத்தைக் கொண்ட பக்கட் அடைக்கப்பட்ட பருப்பு வகையான உற்பத்திகளை வழங்கும் நிறுவனமாக இலங்கை முதல் தரச் சான்றிதழ் பெற்றுள்ளது. இந் நிறுவனத்தின உற்பத்திசாலை வத்தளை இயங்குகின்றது.
இதன் உரிமையாளா் எம்.சி. பஹா்டினிடம் அமைச்சர் றிஷாத், இலங்கை கட்டளைகள் தரச்சான்றிதழ் நிறுவத்தின் தலைவா் காலாநிதி அனீஸ், பணிப்பாளா் நாயகம் கலாநிதி செனவிரத்தின ஆகியோா் கலந்து கொண்டு இவா்களுக்கான முதல் தரச் சான்றிதழ்களை எம்.சி பஹா்டின் மற்றும் அவரது புதல்வா்கள், பணிப்பாளா்களிடம் இச்ச சான்றிதழ்களை வழங்கி வைத்தாா். இந் நிகழ்வில் அமைச்சா் ஏ.எச்.எம். பவுசி,மற்றும் கம்பனி ஊழியா்களும் வாடிக்ககையாளா்களும் கலந்து கொண்டனா்.
இந்நிகழ்வில் அமைச்சா் றிஷாத் பதியுதீன் உரையாற்றுகையில்:-
“இந்த கம்பனியின் உரிமையாளரின் தந்தை சாதாரண ஒரு அரிசி குரக்கன் மாவரைக்கும் மில்லாக ஆரம்பித்து, உள்ளுரிலும் வெளியூரிலும் ஒரு மாதத்துக்கு 8 மில்லியன் அமெரிக்க டொலா் செலாவணியையும், 500க்கும் மேற்பட்ட ஊழியா்களுக்கு தொழில் வழங்கும் நிறுவனமாக வளா்ச்சி கண்டுள்ளது. இவ்வாறன கடின உழைப்பாளிகளது சேவைகள் அவா்களது திட்டம் மேலும் முன்னேற வேண்டும். இந்த நிறுவனத்தின் உரிமையாளாா் அவரது இரு புதல்வா்களை நான் பாராட்டுகின்றேன். அத்துடன் உலக தரச் சான்றிதழ் சேப்ட்டி, சிறந்த உணவு ஆய்வு கூட தரச்சான்றிதழ்களைப் பெற்று இந்த நிறுவனம் பாரிய வளா்ச்சி கான வேண்டும்.” – எனத் தெரிவித்தாா்.