Breaking
Fri. Nov 15th, 2024
OLYMPUS DIGITAL CAMERA

உணவு பொதியிட பயன்படுத்தப்படும் தரமற்ற ஒருதொகை பொலித்தின்கள் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

போகந்தர தெற்கு மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்டு வந்த, பொலித்தின் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் இருந்தே இவை கைப்பற்றப்பட்டுள்ளதாக, அதிகார சபையின் தலைவர் ஷசித திலகரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய போகந்தர தெற்கு பகுதியிலுள்ள நிறுவனத்தில் இருந்து தலா 10 சீட்கள் அடங்கிய 510 பக்கற்றுக்களும் இரத்மலானை நிறுவனத்தில் இருந்து, இதுபோன்ற 410 பக்கற்றுக்களும் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை குறித்த பொருள்களை தயாரித்தவர் தமது தயாரிப்புக்களை போலி பெயர் மற்றும் லேபள்களுடன் சந்தையில் விற்பனை செய்ததாகவும், நுகர்வோர் விவகார அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

சந்தேகநபரை எதிர்வரும் 29ம் திகதி கடுவளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

By

Related Post