அப்துல்லாஹ்
2016 ஆம் ஆண்டில் தரம் ஒன்றிற்கு பிள்ளைகளை அனுமதிப்பதற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை எதிர்வரும் ஜுலை மாதம் 10 ஆம் திகதிக்கு முன்பதாக பாடசாலைகளின் அதிபர்களுக்கு பதிவுத் தபாலில் அனுப்பிவைக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை இவ்வாறான அனுமதியின்போது அரசியல்வாதிகள் தாம் விருப்பிய பிள்ளைகளின் பெயர்ப் பட்டியல்களை முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அறிவித்துள்ளார்.
தேசிய மற்றும் மாகாண மட்டத்திலுள்ள அரசியல்வாதிகள் பலர் கடந்த காலத்தில் தம்முடன் நெருங்கிப் பழகுவோரின் பிள்ளைகளை சட்டவிரோதமான முறையில் பாடசாலைகளில் சேர்த்துள்ளதாக அமைச்சுக்கு தகவல் கிடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் உரிய தகைமைகளைப் பூர்த்தி செய்யாத பிள்ளைகளும் பாடசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
நாட்டிலுள்ள அனைத்து பிள்ளைகளுக்கும் பாடசாலைகளில் தரம் ஒன்றில் சேர்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதே தமது கொள்கை என கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அரசாங்கப் பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு பிள்ளைகளை சேர்ப்பதற்கான விண்ணப்பப் படிவம் அடங்கிய சுற்றுநிருபம் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.