அப்துல்லாஹ்
தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை இன்று நாடு பூராகவும் இடம்பெறுகின்றது.
நாடு பூராகவும் 2870 பரீட்சை மத்திய நிலையங்களில் 335585 பரீட்சார்த்திகள் இன்று இந்தப் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார அறிவித்துள்ளார்.
பரீட்சை தொடர்பாக பரீட்சைகள் திணைக்களம், பரீட்சார்த்திகளுக்கும், பெற்றோருக்கும், பாடசாலை அதிபர்களுக்கும் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கியுள்ளது.
விடை எழுதுவதற்காக வழங்கப்பட்டுள்ள காலம் தொடர்பாக மாணவர்கள் கவனம் செலுத்துவது அவசியமாகும். பகுதி ஒன்று வினாப்பத்திரம் 45 நிமிடங்களை உள்ளடக்கியதாகும்.
காலை 9.30 முதல் முற்பகல் 10.15 வரை பகுதி ஒன்றிற்கான பரீட்சை நடைபெறும்.
பகுதி இரண்டு வினாப்பத்திரத்திற்கான கால எல்லை முற்பகல்.10.45 முதல் பகல் 12 மணிவரை நீடிக்கும்.
மாணவர்கள் தமது சுட்டிலக்கத்தை தெளிவாகக் குறிப்பிடுவது அவசியமாகும்.
மாணவர்கள் இலகுவான வினாக்களுக்கு முதலில் விடை எழுதுவது உகந்தது என்று ஆலோசனை வழங்கப்படுகின்றது.
மாணவர்ளை நேரகாலத்திற்கு பரீட்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்லுமாறு பரீட்சைகள் திணைக்களம் பெற்றோர்களையும் பாதுகாவலர்களையும் அறிவுறுத்தியுள்ளது.
பரீட்சை ஆரம்பமானது முதல் பரீட்சை இடம்பெறும் வளாகத்திற்குள் செல்ல பெற்றோருக்கும், பாதுகாவலருக்கும் அனுமதியளிக்கப்பட மாட்டாது.
தண்ணீர் போத்தல்களையும் சிற்றுண்டிகளையும் மாணவர்கள் தம்முடன் பரீட்சை நிலையங்களுக்கு எடுத்துச் செல்ல முடியும்.