Breaking
Wed. Mar 19th, 2025

யால தேசிய வனவிலங்குகள் சரணாலயம் தற்காலிகமாக மூடப்படுவதாக வனவிலங்குகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய செப்டெம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி வரை இது மூடப்படுவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விலங்குகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் சரணாலயம் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள விலங்குகளின் இயற்கை நடத்தைகள் குறுக்கீடு இல்லாமல் இடம்பெறுவதற்கும் யால வனவிலங்குள் சரணாலம் மூடப்படுவதாக வனவிலங்குகள் பாதுகாப்பு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை ஒவ்வொரு வருடமும் குறித்த காலப்பகுதியில், யால சரணாலயத்தை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

By

Related Post