Breaking
Sun. Dec 22nd, 2024

பிரேசில் அதிபராக இருந்த டில்மா ரூசோப் ஊழல் புகார் காரணமாக பாராளுமன்றத்தின் மூலம் பதவிநீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக மைக்கேல் டெமர் புதிய அதிபராக கடந்த வாரம் பதவியேற்றார்.

இந்த நிலையில் பிரேசில் சுதந்திர தினவிழா நேற்று தலைநகர் பிரேசிலியாவில் நடந்தது. அதையொட்டி ராணுவ அணிவகுப்பு மரியாதை நடந்தது.

விழாவில் பங்கேற்ற அதிபர் மைக்கேல் டெமர் திறந்த ஜீப்பில் ஏறி அணி வகுப்பு மரியாதையை பார்வையிட்டார். அப்போது மைக்கேல் டெமரின் எதிர்ப்பாளர்கள் அவருக்கு எதிராக ‘ஓ’ வென கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டனர். கேலி-கிண்டலும் செய்தனர்.

இதற்கிடையே டெமரின் ஆதரவாளர்கள் அவர் அணிவகுப்பு மரியாதையை ஏற்ற போது கை தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். ஆனால் இவற்றை யெல்லாம் டெமர் கண்டுகொள்ளவலில்லை.

ஏனெனில் இது அவருக்கு புதியது அல்ல. கடந்த மாதம் ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவின் போதும் இவர் பேச்சின் போது அவரது எதிர்ப்பாளர்கள் கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டனர்.

By

Related Post