Breaking
Sun. Dec 22nd, 2024

வட மாகாண சபையின் உறுப்பினரும் அ.இ.ம.காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியுமான கெளரவ றிப்கான் பதியுதீன் அவர்கள், கட்சியின் தலைவர், அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களின் வேண்டுகோளுக்கி ணங்க தன்னுடைய மாகாண சபை உறுப்பினர் பதவியை 06/10/2017 திகதி , இராஜினாமாச் செய்துள்ளார். இதன் மூலம் ஒரு முக்கிய செய்தியை சமூகத்திற்கும் நாட்டிற்கும் வழங்கியுள்ளார்.

தான் சார்ந்த சமூகத்தின் நலனுக்கும்- கட்சியின் நலனுக்கும் சேவைகள் செய்வதற்கு பதவிகளும் அதிகாரங்களும் அணிகலன்கல்ல; என்பதைச் செயலில் காட்டியுள்ளார். தன்னுடைய கட்சி அரசாங்கத்தில் பங்காளியாகவுள்ள நிலையிலும், தன்னுடைய சகோதரன் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அமைச்சரவையில் மிகப் பொறுப்பு வாய்ந்த ஒரு அமைச்சராக இருக்கும் நேரத்திலும் , பட்டம் பதவிகளுக்காக கிடைத்த பதவியோடு மேலும் பல பதவிகள் கிடைக்காதா என பதவி ஆசையில் ஏங்கித் தவிப்போர் பலர் இருக்கும் இச் சந்தர்ப்பத்தில், தனது சமூதாய நலன் கருதி தலைவனின் அன்புக் கட்டலையைச் சிரமேற்கொண்டு தனது பதவியை இராஜினாமாச் செய்திருப்பது, அவரது பரந்த விரிந்த தியாக உள்ளத்தை எடுத்துக் காட்டுவதாகவே அமைந்துள்ளது. ” தியாக மனப்பான்மை, விட்டுக் கொடுப்பு, சகிப்புத்தன்மை ” என்பன வள்ளல் நபியின் வழிமுறை யென்பதால், அதற்காக எமது கட்சியின் உள்ளம் மகிழ்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

தனது இராஜினாமாக் கடிதத்தை கையளிக்கும் போது முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்திற்கு வட மாகாண சபையும் மற்றும் மொழிச் சகோதரர்களான தமிழ் மக்களுக்கும் உதவவேண்டும் என்று அவர் ஆற்றிய உருக்கமான உரை எளிதில் மறக்கக்கூடியதொன்றல்ல.

வடபுல முஸ்லிம்களின் மீள் குடியேற்ற முயற்சிகளுக்கு ஒரு சில இனவாத தீய சக்திகள் முட்டுக் கட்டைகள் போடுவதற்கு எதிராக தனது கருத்தை வலியுறுத்தி நின்றமை இங்கு குறிப்பிடத்தக்க தாகும்.

அ. இ. ம.கட்சி, மக்கள் சேவையை இலட்சியமாக கொண்டு செயல்படுவதால் , பதவி களையும் அதிகாரங்களையும் பகிர்ந்து கொள்வதில் அது எத்தகைய பிரச்சினைகளையும் காண்பதில்லை.

அ.இ.ம.காங்கிரஸ் கட்சியானது எப்போதும் அநீதிகளுக்கு எதிராகவும்- அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்துவந்துள்ளது. அத்துடன் சகல மக்களுக்கும் சாதி, இன, மத, மொழி வேறுபாடுகள் காட்டாது தியாக

சிந்தனையுடன் செயலாற்றி வந்துள்ளது.

இத்தகைய சேவையை அப்பதவிக்குத் தொடர்ந்து வரும் எமது அங்கத்தவராலும் தொய்வின்றி தொடர ஆசி கூறி, றிப்கான் பதியுதீன்அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை எமது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் பெருமனதோடு தெரிவித்துக்கொள்கின்றோம்.

எஸ். சுபைர்தீன்.

செயலாளர் நாயகம்,

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

Related Post