எனது தலையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பதே வேறு நபர்கள் சொல்லித்தான் எனக்குத் தெரியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட நான்கு பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் மேல் நீதிமன்றம் துமிந்த சில்வா உள்ளிட்ட ஐந்து பேருக்கு மரண தண்டனை விதித்திருந்தது.
நேற்றைய வழக்கு தீர்ப்பின் போது நீதிபதிகளிடம் துமிந்த இதனைத் தெரிவித்திருந்தார். எனக்கு எதுவும் தெரியாது.
எனது தலைக்கு துப்பாக்கிச் சூடு பட்டது என்பதே வேறு நபர்கள் சொல்லித்தான் அறிந்துகொண்டேன். நான் எந்தவொரு விடயத்துடனும் தொடர்புபடவில்லை. என்னை குற்றமற்றவர் என அறிவித்து விடுதலை செய்யவும் என கூறியிருந்தார்.
மரண தண்டனை விதிக்கப்பட முன்னதாக ஏதேனும் சொல்ல வேண்டியிருந்தால் சொல்ல முடியும் என நீதிபதிகள் துமிந்தவிடம் கூறிய போது மேற்கண்டவாறு கூறியுள்ளார்.