தேசிய அரசாங்கத்தின் கீழ் எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் நாட்டுக்கும் மக்களுக்கும் மிகப் பொருத்தமான வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுமென நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி. விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
புதிய அரசியலமைப்பை தோற்றுவிப்பதற்குப் பொருத்தமான சூழல் தற்போது கிடைத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொதுத் தேர்தலுக்கு பின்னர் அமைக்கப்படவுள்ள தேசிய அரசாங்கத்தின் கீழ் இலங்கைக்கேற்ற அரசியலமைப்பொன்றை உருவாக்க ஒத்துழைக்குமாறு மக்களிடம் முன்வைக் கப்பட்ட கோரிக்கைக்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். இதற்கமைய உச்ச சட்ட வாக்கத்தைக் கொண்ட நாட்டிற்கும் மக்களுக்கும் பொருத்தமான புதிய அரசியலமைப்பை உருவாக்க சந்தர்ப்பம் கிட்டியுள்ளதெனவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
நீதி அமைச்சராக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அமைச்சின் பணியாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே தயாரிக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்புக் குறித்து நம்பிக்கை வெளியிட்டார்.
அரசியலமைப்பு ஆரம்பம் முதல் பல்வேறு மாற்றங்களுக்குள்ளாகியுள்ளது. 18 தடவைகள் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால் எமது அரசியலமைப்பு முன்னரிலும் குழம்பிபோயுள்ளது. இந்நிலைமை மேலும் தொடரக்கூடாது என்பதற்காகவே நாட்டிற்கும் மக்களுக்கும் பொருத்தமான இலங்கை அரசியலமைப்பு ஒன்று தேவை என்ற நிலைப்பாட்டிற்கு நாம் வந்ததாகவும் அமைச்சர் குறிப் பிட்டார்.
மேலும் 19வது அரசியலமைப்பின் படி உடனடியாக அரசியலமைப்பு சபையினை நிறுவி, சுயாதீன ஆணைக் குழுக்களுக்கான ஆணையாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படு மென்றும் அவர் தெரிவித்தார்.
ஒரு சில தினங்களில் சுயாதீன கணக்காய்வு ஆணைக்குழு தொடர்பிலான சட்டமூலம் பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்படும். அதேநேரம் இது வரை நாட்டில் தவறவிடப்பட்ட நல்லிணக்கம் வலுவான முறையில் முன் னெடுக்கப்படுமென்றும் அவர் கூறினார்.
சுமார் 800 வருடங்களுக்கு முன்பிருந்த உலகில் ஜனநாயகம் என்ற கோட்பாடு முக்கியத்தும் பெற்றது. 1215 முதல் உலக நாடுகள் இதனை கடைபிடிக்க ஆரம்பித்தன. 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது முதல் இலங்கையிலும் புதிய கலாசார மாக ஜனநாயகம் பின்தொடரப்படு கின்ற போதும் 2015 ஆம் ஆண்டே இலங்கை வரலாற்றில் தடம்பதிக்க கூடிய ஜனநாயகத்துக்கு மிகப் பொருத் தமான ஆண்டாகுமென்றும் அமைச்சர் கூறினார்.
கடந்த காலங்களில் ஜனநாயகத்தின் முக்கிய அம்சமான மனித உரிமைகள் பின்தள்ளப்பட்டிருந்தன. அபிவிருத்தி மாத்திரம் ரயில் இயந்திர வேகத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த இயந்திரம் புகைவிடும் இயந்திரம் இதனை ஹைபிரிட் இயந்திரமாக மாற்aடு செய்ய எமது ஸ்ரீல.சு.க. தலைவரும் ஐ.தே.க தலைவரும் முன்வந்துள்ளனர். இவர்களின் தலைமையில் அனைத்து துறையிலும் பாரிய அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுவது உறுதியென்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த 40 வருடங்களாக மக்கள் நலன் கருதி பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாத எத்தனையோ சட்டமூலங்களை ஐ.தே.க அரசாங்கம் மிகக் குறுகிய 100 நாட்களுக்குள் வெற்றிகரமாக சாதித் துள்ளது.
அரசியல் வல்லுநர்கள், கல்விமான்கள், வாழ்க்கையில் நடக்குமென நினைத்திராத வகையில் 19வது திருத்தம் நிறைவேற்றப் பட்டது. அபிவிருத்தியடைந்த நாடுகளால் கூட சாதிக்க முடியாத இலங்கையில் சுமார் 40 வருடங்களாக இழுபறி நிலையிலிருந்த மருந்துக் கட்டுப்பாட்டு சட்டமூலத்தை நிறைவேற்றினோம். சுமார் 11 வருடங்கள் இழுபறியிலிருந்த பிரதிவாதிகள் மற்றும் சாட்சியாளர்கள் பாதுகாக்கும் சட்டமூலம் நிறைவேற் றப்பட்டது.
இத்தனை வெற்றிக்கும் எமது கட்சியின் கொள்கையும் எதிர்க்கட்சி மற்றும் திணைக்கள உயரதிகாரிகளின் ஒத்துழைப்புமே முக்கிய காரணமாகும் என்றும் அவர் கூறினார்.