தவறு செய்தவர்கள் யாராக இருப்பினும் அவர்களை பாதுகாக்க வேண்டிய அவசியமில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் மத்திய வங்கி ஆளுநர் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளைகோப் குழு முன்னெடுத்து வருவதாகவும் அவர் குற்றவாளியாக நிருபிக்கப்பட்டால்அவர் மீது சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்றைய தினம் (29) வழங்கிய நேர் காணலிலே அவர் இதனைத்தெரிவித்துள்ளார்.
அத்துடன் மத்திய வங்கி ஆளுநருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையின் படி அர்ஜுன் மகேந்திரன்நிரபராதி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
மேலும் இவர் மீதான குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்ற ஒன்றென தான் கருதுவதாகவும்பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.