பாராளுமன்ற உறுப்பினர்கள் தவளைகளின் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக சமூக நீதிக்கான தேசிய அமைப்பின் தலைவர் மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஒர் சந்தைப் பண்டமாக மாறியுள்ளதாகவும் எந்த நேரத்திலும் அதனை விற்பனை செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தவளைகள் ஒரு பக்கத்திலிருந்து மற்றைய பக்கத்திற்கு தாவுவதனைப் போன்றே பாராளுமன்ற உறுப்பினர்களும் தாவி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மிருகங்களுடன் பணியாற்றுவதற்கு வனவிலங்கு அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதனைப் போன்றே, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒரு சில தகமைகள் அவசியப்படுவதாகத் தெரிவித்துள்ளார். 20ம் தருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படும் என நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.