Breaking
Mon. Dec 23rd, 2024

களுபோவில, வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள நவமணி அலுவலகம் நேற்று முன்தினம்  (09) இரவு இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கொஹுவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சனிக்கிழமை விடுமுறை என்பதனால் அலுவலகம் மூடப்பட்டிருந்தது  இந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த மர்மநபர் சி.சி.டி.வி.யின் இணைப்பை துண்டித்துவிட்டு, அலுவலகத்தின் பூட்டை உடைப்பதற்கு முயற்சித்துள்ளதாகவும் பூட்டின் உறுதித்தன்மை காரணமாக முயற்சி கைவிடப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

மர்மநபர் முகத்தை மூடிக்கொண்டு சி.சி.டி.வி.யின் இணைப்பை துண்டித்துள்ளதால் குறித்த நபரை அடையாளம் காணமுடியவில்லை. இதனை பரிசீலித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோன்று, கடந்த செப்டெம்பர் 4ஆம் திகதி இரவுநேரத்தில் நவமணி அலுவலகத்துக்கு மர்மநபர்கள் இருவர் ஆயுதங்களுடன் வந்து சி.சி.டி.வி. கமெராவுக்கு ஸ்டிக்கர்களை ஒட்டிவிட்டு சென்றனர்.

2002ஆம் ஆண்டு இனந்தெரியாத விஷமிகளால் நவமணி அலுவலகம் முற்றாக தீவைக்கப்பட்டு எரிக்கப்பட்டது.

இனவாத பிரசாரங்களுக்கு எதிராக நவமணி பத்திரிகை அடிக்கடி பல செய்திகளை வெளியிட்டு வருகின்ற நிலையிலேயே குறித்த  சம்பவம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

navamani_1 (2)

By

Related Post