Breaking
Mon. Dec 23rd, 2024
நல்லாட்சியையும் சகவாழ்வையும் இலக்காக கொண்டு போராடி இன்னுயிர் நீத்த கோட்டே ஸ்ரீ நாகவிகாரையின் விஹாராதிபதி மாதுலுவாவே சோபித தேரருக்கு பல்லாயிரக் கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று மாதுலுவாவே சோபித தேரருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

கடந்த காலங்களில் மக்களுக்காக பல போராட்டங்களை முன்னெடுத்த வீரரின் இழப்பு நாட்டிற்கு பேரிழப்பு என அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது குறிபபிட்டார்.

கடந்த காலங்களில் தேரர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டும் இழிவுகளை ஏற்படுத்திய போதும் அவர் தனது கொள்கையில் இருந்து விடுபட வில்லை என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

அவருடைய கருத்தில் அவர் தொடர்ந்தும் முன்னின்றதோடு நோய்வாய்ப்பட்டிருந்த காலத்தில் தொலைபேசி ஊடாக கலந்துரையாடியது மாத்திரமன்ற நேரடியாக வருமாறு பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபகஷவுக்கு தேரர் அழைப்பு விடுத்ததாகவும் அவர் இதன் போது தெரிவித்தார்.

mahinda_sobitha_004

mahinda_sobitha_003

mahinda_sobitha_002

mahinda_sobitha_001

By

Related Post