Breaking
Mon. Dec 23rd, 2024

ரகர் வீரர் வசிம் தாஜுடீன் விபத்துக்குள்ளான வாகனம், தமது நிறுவனம் விற்பனை செய்யவில்லை என கார் இறக்குமதி செய்யும் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. குறித்த வாகனத்தை இலங்கைக்கு இறக்குமதி செய்து விற்பனை செய்யும் நிறுவனமே இவ்வாறு நீதிமன்றில் நேற்று அறிவித்துள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸிடம் அறிக்கை சமர்ப்பித்ததோடு, இவ் வாகன மாதிரி தங்கள் நிறுவனத்தின் ஊடாக நேரடியாக கொள்வனவு செய்ய முடியொதென குறிப்பிட்டுள்ளனர்.

உள்ளூர் இறக்குமதியாளர்கள் ஊடாகவோ அல்லது தனிப்பட்ட ரீதியில் இவ் வாகன மாதிரி இறக்குமதி செய்யப்படும் என குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவ் விபத்தின் காரணமாக வாகனத்தின் ஸ்டீரிங் கலன்று விழுவதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும் தீப்பற்றியதன் காரணமாக அதிகமாக வாகனம் எரிந்துள்ளன,

தீப்பற்றியதற்கு காரணம் வாகனம் மோதியதனால் தான் என கருத்தை வெளியிட முடியாதென குறித்த நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related Post