றக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் கொலை என சந்தேகிக்கப்படும் மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் இத்தாலியில் உள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த இரு சந்தேக நபர்களும் கடந்த அரசின் மிக முக்கிய பிரமுகர்களுக்கு மிக நெருக்கமானவர்கள் என குறிப்பிடும் அந்த தகவல்கள் கடந்த அரசாங்கம் அதிகாரத்தை இழந்ததும் அவர்கள் நாட்டை விட்டு இத்தாலிக்கு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில் குறித்த இருவரையும் நாட்டுக்கு அழைத்துவருவது தொடர்பிலான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்றுவருவதாக அறிய முடிகின் றது.
எவ்வாறாயினும் வஸீம் தாஜுதீனின் மர்ம மரணம் கொலையா, விபத்தா என நீதிமன்றம் தீர்ப்பளிக்காத நிலையில் சந்தேக நபர்களாக எவரையும் குற்றப் புலனாய்வுப் பிரிவு பெயரிடவில்லை எனவும் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
தாஜுதீனின் மர்ம மரணம் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவு தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுக்கும் நிலையில் பெரும்பாலும் அது கொலையாக இருக்க முடியும் என அந்த பிரிவினர் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர். இதனையடுத்தே தாஜுதீனின் சடலம் கடந்த மாதம் 10 ஆம் திகதி தோண்டி எடுக்கப்பட்டு மீளவும் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட் டது.
இந் நிலையில் இது தொடர்பிலான அறி க்கை எதிர்வரும் 10 ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன் வாகனம் தொடர்பில் விசேட நிபுணர்களின் அறிக்கையும் அன்றைய தினம் சமர்ப்பிக்கப்பட வுள்ளது.
இந் நிலையிலேயே தற்போது தாஜுதீனின் கொலை என கருதப்படும் மரணத்துடன் தொடர்புடைய இருவர் இத்தாலியில் உள்ளமை தெரியவந்துள்ளது.