கொழும்பு மேலதிக நீதிவான் நிஷாந்த பீரிஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தாஜூடினின் மரணமானது கொலையென உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான சந்தேகநபர்களை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் வசீம் தாஜூடீன் மரணம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்ட பாதுகாப்பு கெமராக்களில் பதிவான காட்சிகளை வெளிநாடு ஒன்று அனுப்பி மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து அரச சட்டத்தரணி, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்துள்ளார்.
சீ.சீ.டி.வி கெமராக்களில் பதிவான காட்சிகளை வெளிநாட்டுக்கு அனுப்பி பரிசோதனைகளை மேற்கொள்ளும் போது தாமதங்கள் ஏற்படும் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருப்பதாக அரச சட்டத்தரணி டிலான் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் வாதங்களை முன்வைத்த அரச சட்டத்தரணி டிலான் ரத்நாயக்க, வசீம் தாஜூடீனின் மரணம் குறித்து தொடர்ந்தும் விசாரணை நடத்தி வருவதாகவும் 16 சாட்சியாளர்களிடம் சாட்சியங்களை பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.