Breaking
Wed. Mar 19th, 2025
ரகர் வீரர் வசீம் தாஜூடின் மரணம் தொடர்பிலான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என அவரது நெருங்கிய உறவினர் ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸிடம் இதனைத் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அச்சுறுத்தல் விடுப்பது யார் ஏன் இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது என்பது குறித்து தனியான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அண்மையில் தாஜூடினின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு மீளவும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

தாஜூடினின் தாயாரிடம் இரத்த மாதிரி பெற்றுக்கொள்ளப்பட்டு தோண்டி எடுக்கப்பட்ட சடலம் தாஜூடினினது என்பதனை உறுதி செய்ய மரபணு பரிசோதனை நடத்தப்பட்டு வருகின்றது.

சம்பவம் தொடர்பில் சில நபர்கள் தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

By

Related Post