இலங்கையின் முன்னாள் ரக்பி வீரரும் ஹெவலொக்ஸ் அணியின் தலைவருமான வாசிம் தாஜூதீனின் மரணம் விபத்து அல்ல. கொலை என்று குற்றப்புலனாய்வுத்துறையினர் கொழும்பு மேலதிக நீதிவானிடம் தெரிவித்துள்ளனர்.
மரணத்துக்கு முன்னர் தாஜூதீனின் கழுத்துக்கு கீழ் பகுதியில் கடுமையான சித்திரவதை செய்யப்பட்டமைக்கான அடையாளங்கள் தென்படுகின்றன.
அத்துடன் அவரின் பற்கள் உடைக்கப்பட்டிருந்தன. விலாஎலும்பு மற்றும் தொடை எலும்புகளில் சேதங்கள் ஏற்பட்டிருந்தன என்றும் குற்றப்புலனாய்வுத்துறையினர் மன்றில் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை தாஜூதீனின் கொலை தொடர்பான இறுதி மரணப ரிசோதனை அறிக்கை இன்னும் வெளியாகவில்லை என்றும் மன்றில் தெரிவிக்கப்பட்டது.
2012ஆம் ஆண்டு மே மாதம் வாசிம் தாஜூதீன் விமான நிலையத்துக்கு சென்று திரும்புகையில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் தமது காரை சுவரில் ஒன்றில் மோதிய நிலையில் மரணமானார் என்று பொலிஸ் அறிக்கை தெரிவித்திருந்தது.
இந்த மரணத்தின் பின்னால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோசித்தவின் பெயர் பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.