Breaking
Sun. Mar 16th, 2025

தாதியர் பயிற்சி பாடசாலைகளை, தாதியர் பல்கலைக்கழகங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

உலகில் வேறு எந்தவொரு நாட்டிலும் இல்லாதளவில் இலவசக் கல்வியையும் தரமான சுகாதார சேவையையும் ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் அனைத்து வகையிலும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

அரச சேவைகள் ஐக்கிய தாதியர் சங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இன்று முற்பகல் நடைபெற்ற சர்வதேச தாதியர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

Related Post