மக்கள் நண்பன் – சம்மாந்துறை அன்சார்
யாழ்ப்பாணம் தாதியர் பயிற்சிக் கல்லுாரியில் 2011 ஏ தொகுதி இறுதிப் பரீட்சையில் சம்மாந்துறையைச் சேர்ந்த மாணவிகள் சிறப்புச் சித்தியடைந்திருக்கின்றார்கள்.
இலங்கையின் முண்ணனி தாதியர் பயிற்சிக் கல்லுாரிகளில் ஒன்றான யாழ்ப்பாண தாதியர் பயிற்சிக் கல்லுாரியில் மூன்று வருட கால தாதிய பயிற்ச்சியினை வெற்றிகரமாக முடித்து இறுதிப் பரீட்சையிலேயே இவர்கள் சித்தியடைந்திருக்கின்றார்கள்.
இறுதிப் பரீட்சையில் சிறந்த சித்தியினை அடைந்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான தரம் 3 தாதியர் நியமனங்களை பெற்று சம்மாந்துறைக்கும், வைத்திய சேவைக்கும் பெருமையை தேடித் தந்த புதிய தாதியர்களின் விபரமும் கிழக்கு மாகாணத்திற்கான நிலையும்-Rank கீழே தரப்பட்டுள்ளன.
01. கே.நபாயிரா – Rank 03
02. எம்.ரீ.பாத்திமா ரஜியா – Rank 10
03. ஏ.ஜே. விஜினா பேகம் – Rank 18
04. ஏ.ஆர். ஜெஸ்லுான் – Rank 89
05. ஆர். பாத்திமா ஹிப்னா – Rank 107
சுகாதார துறையில் தாதியர் சேவை என்பது உயிர் நாடியாகும், ஒவ்வொரு நோயாளிகளோடும் அன்பாகவும், ஆறுதலாகவும் இருந்து பணிவிடை செய்து அவர்களைப் பராமரிக்கும் ஒரு புனிதமிக்க சேவையாகும்.
இவ்வாறான புனிதமிக்க சேவையில் தங்களை ஈடுபடுத்தி இறுதிப் பரீட்சையில் சிறப்பு சித்திபெற்று புதிய தாதியர்களாக நியமனம் பெற்று சம்மாந்துறைக்கு பெருமை சேர்த்த தாதியர்களை மக்கள் நண்பன் இணையத்தளம் சார்பாகவும், சம்மாந்துறை மக்கள் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.
மேலதிக விபரங்களுக்கு – www.health.gov.lk