Breaking
Sun. Dec 22nd, 2024
நாட்டினுள் சுதந்திரம், ஜனநாயகம் உறுதியாகியுள்ளமையினால் மீண்டும் தாய் நாட்டிற்கு வருமாறு தாய்லாந்தில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, நேற்று இடம்பெற்ற ஊடகவிலயாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் மூலம் உறுதியளித்துள்ள அனைத்து உரிமைகளை வலுப்படுத்துவதற்கு சுயாதீன விசாரணைக் குழு நிறுவப்படுவதற்கு தங்கள் அரசாங்கம் செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன் போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தூதரக அலுவலகத்தினால் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த நாட்டில் வசிக்கும் வர்த்தகர்கள், சம்மேளன உறுப்பினர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோர் குறித்த ஊடகவிலாளர் சந்திப்பில் இணைந்து கொண்டுள்ளனர்.

thailand_maithiri_001

By

Related Post