Breaking
Sat. Jan 11th, 2025

6 மாத குழந்தை ஒன்று சந்தேகத்திற்கு இடமான முறையில் மரணமானமை தொடர்பில் குழந்தையின் தந்தை மற்றும் சித்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக கருவலகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.

ஹிருணி மதுமாலி என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குழந்தையின் தாய் வெளிநாட்டு வேலைக்கு சென்றுள்ள நிலையில் குழந்தை தாயின் தங்கையிடம் வளர்ந்து வந்துள்ளது.

குழந்தை திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த பின் இடம்பெற்ற பிரேத பரிசோதனையில் குழந்தையின் தொண்டையில் காயம் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அதன்பின் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 6 மாத குழந்தை உள்ள தாய் வெளிநாடு சென்றது எப்படி என்று பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Post