Breaking
Sun. Dec 22nd, 2024

மும்பையில் 1993 ஆம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு தொடர்புள்ள சந்தேக நபர் தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்திய அரசு,  தாவூத் இப்ராகிமை ஒப்படைக்க வேண்டும் என்று பல முறை கேட்டும் பயனில்லை. தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் இல்லை என்று தொடர்ந்து பாகிஸ்தான் கூறி வருகிறது.

எனவே, இது தொடர்பாக இந்தியா ஐ.நா. சபையில் புகார் கூறியது. மேலும் அவன் வசிக்கும் 9 முகவரிகளை கண்டுபிடித்து அதன் ஆதாரத்தையும் ஐ.நா. சபையில் தாக்கல் செய்தது.

இது சம்பந்தமாக ஐ.நா.சபை தனியாக சிறப்பு குழுக்கள் மூலம் விசாரணை நடத்தியது. அதில், இந்தியா கொடுத்துள்ள 9 முகவரிகளில் 6 முகவரி சரியானது என்றும், அவன் அங்குதான் வசிக்கிறான் என்றும் ஐ.நா. சபை கூறி உள்ளது.

இதையடுத்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் ஒரு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-

தாவூத் இப்ராகிம் ஒரு போதும் பாகிஸ்தானில் வசிக்கவில்லை. இப்போதும் இங்கு இல்லை. ஐ.நா. சபை கூறி இருக்கும் தகவல் தவறானது. இது உள்நோக்கம் கொண்டது. பாகிஸ்தானை குற்றச்சாட்டுக்கு ஆளாக்க வேண்டும் என்பது இந்தியாவின் எண்ணமாக உள்ளது. தீவிரவாதத்தை ஒழிப்பதையே பாகிஸ்தான் தனது குறிக்கோளாக செயல்பட்டு வருகிறது.

By

Related Post