Breaking
Sat. Mar 15th, 2025

மீகஸ்தென்ன பாடசாலை ஒன்றில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளுமாறு உண்ணாவிரதம் இருந்து வந்த பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும திடீரென நேற்று பகல் தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனையடுத்து இவரை காப்பாற்றிய பொதுமக்கள் இவரை உடனடியாக நாகொட வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், அவரது நிலைமை மோசமடைந்ததை அடுத்து கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அத்துடன், பிரதி அமைச்சருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் இவர் தீவிர சிகிச்சைப்பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் உடல்நிலை மோசமான நிலையிலேயே உள்ளதாகவும் வைத்தியசாலை தரப்பினர் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post