Breaking
Wed. Nov 20th, 2024
கிண்ணியா தளவாய் சின்னத்தளவாய் கிராம மீள்குடியேற்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் இதற்கான சகல ஆரம்ப கட்ட நடவடிக்கைகளும் பூர்த்தியாகியுள்ளது இதற்கான தடைகளை வனபாதுகாப்பு திணைக்களம் தடுத்து வருகிறது எனவும் திருகோணமலை மாவட்டத்தில் நடை முறைப்படுத்தப்பட்டு வரும் அரசினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களை விரைவாக நடை முறைப்படுத்தப்பட வேண்டும் என பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்று (30) இடம் பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இதில் கிழக்கு மாகாண ஆளுனர் ஷான்விஜயலால் டீ சில்வா, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்மந்தன், சுசந்த புஞ்சிநிலமே, கே.துரைரட்ணசிங்கம்,சன்டித் சமரசிங்க ,திருகோணமலைமாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமாரஉட்பட அரச திணைக்கள தலைவர்கள், முப்படைகளின் உயரதிகாரிகள் என பலரும் பங்கேற்ற கூட்டத்தின் போதே இவ்வாறு உயரதிகாரிகளிடம் பணிப்புரை விடுத்தார்
தொடர்ந்தும் உரையாற்றுகையில் உப்பாறு மையிலப்பன் சேனை பகுதியில் அண்மையில் காட்டு யானை தாக்குதலினால் குடும்பஸ்தர் ஒருவர் அகாலமரணமடைந்துள்ளார் குறித்த பிரதேசத்துக்கான யானை வேலிகளை அமைத்து மக்களுடைய குடியிருப்பு பிரதேசங்களை பாதுகாக்க நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டியுள்ளது இதற்கான சகல விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் ,மேய்ச்சல் தளங்கள் இன்றி கால்நடை வளர்ப்பாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகிறார்கள் கிண்ணியா பகுதியில் பல இவ்வாறான பிரச்சினைகள் காணப்படுகிறது .முத்துநகர் பகுதியில் காணி அளவடுகள் இடம் பெற்றுவருகிறது மக்களுடைய சொந்தக்காணிகளை அத்துமீறி அளவீடு செய்வதை நிறுத்துமாறும் உரிய உயரதிகாரிகளை பணித்தார்.
கடந்த காலங்களில் குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் சுமார் ஒரு கோடியே 72 இலட்சம் ரூபா நிதி மீண்டும் திருப்பப்பட்டுள்ளது அரச அதிகாரிகள் தங்களை இதற்காக அர்ப்பணம் செய்து வருகிறார்கள் இவர்கள் கஷ்டத்துக்கு மத்தியில் கடமையாற்றி வருவதை உணர்ந்து கொண்டுள்ளோம் திருகோணமலையில் உள்ள 11 பிரதேச செயலக செயலாளர்களூம் இதற்காக தங்களை அர்ப்பணித்து அபிவிருத்தி நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி மாவட்ட அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்ய வேண்டும் .குறிப்பாக நாடளாவிய ரீதியில் கம்பரெலிய திட்டத்துக்காக தொகுதி ரீதியாக 300 மில்லியன்கள் ஒதுக்கப்பட்டாலும் கூட அது திருகோணமலையில் இரட்டிப்பாக ஒதுக்கப்படுகிறது மாவட்ட செயலக அபிவிருத்தி குழு கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் நடை முறைப்படுத்தப்படுவதில் கால தாமதங்கள் ஏற்படுகிறது இவ்வாறான நடவடிக்கைகளால் அபிவிருத்திக்கான நிதிகள் மீள திரும்புவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படலாம் இதற்காக சகல உரிய அதிகாரிகள் தங்களை அர்ப்பணம் செய்து அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் கடந்த முப்பது வருடகால யுத்தத்தின் காரணமாக திருகோணமலை மாவட்டமும் பாதிக்கப்பட்டுள்ளதை நாம் யாவரும் அறிவோம் இதனை கருத்திற் கொண்டு சகலரதும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் இதற்காக நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் கிழக்கு ஆளுனர் இக்கூட்டத்திற்கு கலந்து கொண்டமையையிட்டு மகிழ்ச்சியடைடிறேன் கல்வி சுகாதாரம் உள்ளிட்ட முக்கிய அபிவிருத்தி நடவடிக்கைகள் மாகாண அரசாங்கத்தின் கீழ் உள்ளது இதனை உணர்ந்து கொண்டு எமது மாவட்ட அபிவிருத்திக்காகவும் உரிய அதிகாரிகள் விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டும் சில முக்கியமான அரச திணைக்களங்களின் ஒத்துழைப்பு எமக்கு முக்கியமாகும் என்றார்.

Related Post