Breaking
Sat. Mar 15th, 2025

உருளு பூங்கா மற்றும் ஹபரனை – திருகோணமலை வீதியின் இருமரங்கிலும் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை பரவிய இந்த காட்டுத் தீயில், சுமார் 2 ஆயிரம் ஏக்கர் காட்டுப் பகுதி தீயால் கருகி நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதியில் நேற்று மாலை திடீரென தீப்பற்றியுள்ளது. இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக பொலிஸார், இராணுவம் மற்றும் வனப்பாதுகாப்பு அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இக்காட்டுத் தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

By

Related Post