Breaking
Sun. Dec 22nd, 2024

பிராந்திய அபிவிருத்தி, நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கள், மாநகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சுக்களுக்கான குழுநிலை விவாதத்தின் போது (30/ 11/ 2017)  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் உரயாற்றினார்.

அவர் கூறியதாவது,

திருகோணமலை மாவட்டம் மற்றும் கிண்ணியா பிரதேச சபை, திருகோணமலை நகர அபிவிருத்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது. திருகோணமலையில் 40 வருட பழைமையான குழாய்நீர் இணைப்புக்களே இருக்கின்றன. இவற்றினால் திருட்டுத்தனமான இணைப்புக்கள் அதிகரித்துள்ளன. இதனை நவீனமயப்படுத்துவதுடன், 455 கிலோமீற்றர்கள் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளோம்.

600 மில்லியன் ரூபா ஜனாதிபதி நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ள போதும், மக்களுக்குத் தேவையான இணைப்புக்கள் இன்னும் வழங்கப்படவில்லை. 120 ஏழைகளுக்கு குழாய் நீர் இணைப்புக்கள் வழங்கப்படும் என்ற உறுதிமொழி வழங்கப்பட்ட போதும், இதனை நிறைவேற்ற இன்னமும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மன்னார் மாவட்டத்தில் இடம்பெயர்ந்து, மீள்குடியமர்ந்துள்ள மக்களுக்கான குடிநீர் பிரச்சினைகள் காணப்படுகின்றன.  அங்குள்ள மக்கள் பணத்தைச் செலுத்திக் கூட இணைப்பைப் பெற முடியாதிருக்கின்றனர். இது குறித்து அமைச்சருக்கும், ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதுவரை இதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றார்.

Related Post