திருகோணமலை மாவட்ட பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதம் வழங்கும் வைபவம் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.
தேசிய கொள்கைகள் பொருளாதார அபிவிருத்தி ,மீள்குடியேற்றம் மற்றும் வடக்கு மாகாண அபிவிருத்தி,இளைஞர் விவகார அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இப் பட்டதாரி பயிலுனர் வழங்கும் நிகழ்வு திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார தலைமையில் இன்று (01) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
மொத்தமாக திருகோணமலை மாவட்டத்தில் 193 பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது இதில் 40 பட்டதாரிகளுக்கான நியமனங்கள் பட்டதாரிகளுக்கான பிரதமர் தலைமையில் இடம் பெற்ற தேசிய நியமனம் வழங்கும் நிகழ்வின் போது வழங்கப்பட்டுள்ளதுடன் மிகுதியான 153 பட்டதாரி பயிலுனர்களுக்கே இன்று(01) வழங்கி வைக்கப்பட்டன.
இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்கள் கலந்து கொண்டு நியமனக் கடிதங்களை இதன் போது வழங்கி வைத்தார்.
மேலும் இக் குறித்த நிகழ்வில் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சன்திப் சமரசிங்க,முன்னால் மாகாண அமைச்சர் ஆரியவதி கலபதி உட்பட பிரசேச செயலாளர்கள், அரச உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டார்கள்.