கலிபோர்னியாவில் 23 வயது இளைஞர் ஒருவர் அவர் திருடிய பணத்தை திருப்பி கொடுத்து மன்னிப்பு கேட்ட வினோத சம்பவம் நடந்துள்ளது.
கலிபோர்னியாவில் உள்ள ஒரு எரிவாயு நிலையத்திற்குச் சென்ற சைல் வாரென் என்னும் இளைஞர், அங்கு இருந்த ஊழியரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி பணம் மற்றும் இரு பீர் பாட்டில்களை திருடிச் சென்றார்.
இச்சம்பவம் நடந்து சுமார் 3 மணி நேரம் கழித்து அதே எரிவாயு நிலையத்திற்கு திரும்பி வந்த சைல் வாரென், திருடிய பணத்தை திருப்பி கொடுத்து மன்னிப்பும் கேட்டுள்ளார். இது குறித்து பொலிஸார் விசாரணை செய்த போது, ஒரு புதிய வாழ்வை துவங்க தனக்கு பணம் தேவைப்பட்டதாக சைல் வாரென் கூறினார்.