பேருவளை, ஹெட்டிமுல்லை பிரதேசத்தில் அமைந்துள்ள முன்னாள் மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்னவின் வீட்டிற்குள் திருடர்கள் புகுந்துள்ளதாகத் தெரியவருகிறது.
போதைப் பொருளுக்கு அடிமையான ஒரு திருட்டுக் கும்பல் இந்த திருட்டை மேற்கொண்டிருக்கலாம் எனவும், அவர்கள் 5 கோப்புகள், 5 குறுந்தகடுகள், ஐ.பேட் கணிப்பொறி, மடிகணணி என்பவற்றை திருடிச் சென்றுள்ளதாக ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
குறித்த வீட்டில் ராஜித சேனரத்ன அவ்வப்போது வந்து தங்கிசெல்வதாகவும், இதனை நன்கு அவதானித்த இந்த திருட்டு கும்பல் வீட்டின் பின்புற ஜன்னலை உடைத்துக்கொண்டு உள்நுளைந்துள்ளதாக களுத்துறை பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.