“திருட்டு பாஸ்போர்ட்”, “டபிள் பாஸ் போர்ட்” என சபையில் ஆளும் தரப்பினர் கூச்சலிட சபைக்குள் சிரித்தவாறு உள்நுழைந்தார் விமல் வீரவன்ச எம்.பி.உயர்
தேசிய கணக்கியல் டிப்ளோமா பாடநெறி மாணவர்கள் பொலிஸாரால் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் நேற்று பாராளுமன்றத்தில் சர்ச்சை இடம்பெற்றுக் கொண்டிருந்தது.
இதன்போதே சபைக்குள் விமல் வீரவன்ச எம்.பி வந்தார். இவரை ஆளும் தரப்பினர் மேற்கண்டவாறு கூச்சலிட்டு ஆரவாரத்துடன் வரவேற்றுள்ளனர்.
இந்த வரவேற்பை விமல் வீரவன்ச சிரிப்புடன் ஏற்றுக் கொண்டு உள்ளே வந்தார்.தமது இருப்பிடத்தில் நின்று கொண்டு இதற்கு எதிர்ப்பினை வெளியிட்டார்.
அண்மையில் விமல் வீரவன்ச எம்.பி வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற போது கடவுச் சீட்டு பிரச்சினை தொடர்பாக அவரது வெளிநாட்டு பயணம் தடைப்பட்டதோடு, கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். இவ்விடயத்தை அடிப்படையாக வைத்தே ஆளும் தரப்பிலிருந்து இந்த எதிர்ப்பு கூச்சல் எழுப்பப்பட்டது.