Breaking
Mon. Dec 23rd, 2024

இலங்கையில் பதிவுத் திருமணங்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2011 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையான கடந்த 4 ஆண்டு காலத்தில் நாட்டில் திருமணங்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்துள்ளது.

2011 ஆம் ஆண்டு 2 லட்சத்து 314 பதிவு திருமணங்கள் நடந்துள்ளன. 2012 ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 710 பதிவு திருமணங்கள் நடந்துள்ளன.
2013 ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 760 திருமணங்கள் நடந்துள்ளன.

2014 ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 728 திருமணங்கள் நடந்துள்ளதாக இலங்கை சனத் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post