Breaking
Tue. Dec 24th, 2024

 

-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திருமலை, மட்டக்களப்பு, அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் மயில் சின்னத்தில் தனித்துக் களமிறங்குவதாகவும், திருமலை, மட்டக்களப்பு மாவட்டங்களின் உள்ளூராட்சி சபைகளுக்கான கட்டுப்பணத்தை செயலாளர் எஸ்.சுபைர்தீன், அந்தந்த மாவட்டங்களின் செயலகங்களில் செலுத்தியதாகவும் மக்கள் காங்கிரசின் அரசியல் விவகார சட்டப் பணிப்பாளர் ருஷ்தி ஹபீப் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகரசபை, கோரளைப்பற்று பிரதேச சபை, கோரளை மேற்கு பிரதேச சபை, ஏறாவூர் பற்று பிரதேச சபை, காத்தான்குடி நகரசபை ஆகியவற்றிலும், திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா நகரசபை, கிண்ணியா பிரதேச சபை, மூதூர் பிரதேச சபை, குச்சவெளி பிரதேச சபை, தம்பலகாமம் பிரதேச சபை, சேருவிலை பிரதேச சபை, திருமலை நகரசபை, திருமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை, கந்தளாய் பிரதேச சபை ஆகியவற்றிலேயே மக்கள் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

 

இதேவேளை, அனுராதபுரம் மாவட்டத்தில் கெக்கிராவ பிரதேச சபை, அனுராதபுர மாநகர சபை, ஹொரவபத்தானை பிரதேச சபை ஆகியவற்றிலும் தனித்துப் போட்டியிடுவதற்காக நாளை கட்டுப்பணத்தை செலுத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related Post