பின்னவல திறந்தவெளி மிருகக்காட்சிசாலைக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரை இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகளின் வருகையால், 08 மில்லியனுக்கும் அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தேசிய மிருகக்காட்சிசாலைகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் ரேணுகா பண்டாரநாயக்க குறிப்பிட்டார்.
நாளாந்தம் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.
பின்னவல திறந்தவெளி மிருகக்காட்சிசாலையில் 40 இற்கும் அதிகமான விசேட உயிரினங்களை பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.