பிரதிசபாநாயகரும் ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் தலைவருமான திலங்க சுமதிபாலவிடம் 1000 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க சட்டக்கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
தமக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாக கூறியே இந்த நட்டஈடு கோரப்பட்டுள்ளது.
இந்த மாத முதல்பகுதியில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா கிரிக்கட்டுக்கான தேர்தலில் திலங்க சுமதிபால வெற்றி பெற்றார்.
இதனையடுத்து போட்டியில் தோல்வியடைந்த அமைச்சர் அர்ஜூன ரணதுங்க கிரிக்கட் வியாபார மாபியாவின் கைகளுக்கு சென்று விட்டதாக குறிப்பிட்டார்.
இதனையடுத்து திலங்க சுமதிபால தெரிவித்த கருத்தே தம்மை அபகீர்த்திக்கு உள்ளாக்கியதாக அர்ஜூன குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தமது கடிதத்துக்கு 14 நாட்களுக்குள் பதில் வழங்காது போனால் சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அர்ஜூன ரணதுங்க எச்சரித்துள்ளார்.