ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க இந்த தகவலை நாடாளுமன்றில் நேற்று (25) தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் போலி ஆவணம் தயாரித்ததாக திஸ்ஸ அத்தநாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி அந்த அறிக்கையை சட்டமா அதிபரிடம் ஒப்படைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
போலி ஆவணம் தயாரிப்பு தொடர்பில் திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என அவர் குறிப்பிடடுள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இரகசிய ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் அது நாட்டுக்கு பாதகமானது எனக் கூறிய திஸ்ஸ
அத்தநாயக்க ஊடகங்களில் ஆவணங்களை சமர்ப்பித்திருந்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதாகவும், வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள படையினரை 50 வீதத்தினால் குறைப்பதாகவும், காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதாகவும் இரகசிய ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என திஸ்ஸ அத்தநாயக்க 2014 டிசம்பர் மாதம் 22ம் திகதி ஊடக சந்திப்பு ஒன்றின் மூலம் தெரிவித்திருந்தார்.
சர்வதேச சமூகத்தை திருப்திபடுத்த மைத்திரிபால சிறிசேனவும் ரணில் விக்ரமசிங்கவும் இரகசிய உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார். இந்த ஆவணத்தையும் அத்தநாயக்க ஊடகங்களில் சமர்ப்பித்திருந்தார்.
எனினும், இந்த ஆவணத்தில் ரணில் மற்றும் மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பங்கள் போலியான முறையில் இடப்பட்டிருந்தமை விசாரணைகளின் மூலம் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து திஸ்ஸ அத்தநாயக்க நாயக்க கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.