பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று மீண்டும் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார்.கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் போலி ஆவணம் தயாரித்ததாகத் தெரிவித்து திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கோட்டை நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக முறைப்பாடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
அத்துடன், சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அவை அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் குறிப்பிட்டது.இதற்கமைய, மேலதிக விசாரணைகளை நீதவான் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.