Breaking
Sun. Dec 22nd, 2024

– ஸப்ரான் .எம். மன்சூர் –

திஹாரிக்கு புதிய அரசாங்க ஆரம்பப் பாடசாலை ஒன்றை அமைப்பதற்கு, முதற்கட்டமாக காணி ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கான நிதி திரட்டும் நிகழ்ச்சித் திட்டம் ஒன்று நேற்று (07) இரவு இடம்பெற்றது.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா திஹாரிய கிளைத் தலைவரும், “புதிய திஹாரிக்கு புதிய அரசாங்க ஆரம்பப் பாடசாலை” எனும் செயத்திட்டத்தின் தலைவருமான அல்-ஹாஜ் அம்ஜத் மௌலவியின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், வளவாலர்களாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் பிரதித் தலைவரும், ஜாமிய்யா நளீமியாவின் பிரதிப் பணிப்பாளருமான அஷ்ஷேய்க் ஏ.சி. ஆகார் முஹம்மட், ரிதீகம அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா கிளை தலைவர். அஷ்ஷேய்க் யு.எல். உபைதுல்லாஹ், World Cultural Center for Development and Training நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷேய்க் நௌபர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

யக்கல பிரதேசத்திலுள்ள தனியார் வரவேற்பு மண்டபம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வுக்கு ஊரிலிருந்து தெரிவு செய்யப்பட்ட வர்த்தகர்கள், ஊர் நலன் விரும்பிகள் சுமார் 250 பேர் கலந்துகொண்டனர்.

அல்லாஹ்வின் உதவியால் இந்த நிகழ்வின் மூலம், தேவைப்பட்ட நிதியின் அரைவாசியினைத் திரட்ட முடிந்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்புக்கு மிக அண்மையில், 24 மணிநேர போக்குவரத்து வசதிகளுடன் கூடிய ,சுமார் இருபது ஆயிரத்தை தாண்டும் சனத்தொகையைக் கொண்ட திஹாரியில் ஒரு அரச ஆரம்பம் பாடசாலையும், ஒரு இடைநிலைப் பாடசாலையும் மாத்திரமே காணப்படுகின்றன.

th6

By

Related Post