– பழுலுல்லாஹ் பர்ஹான் –
இலங்கையில் யுத்தத்திற்குப் பின்னரான சமாதானத் சூழலில் மீண்டும் ஒரு யுத்தம் இடம்பெறுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கம் ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை என கைத்தொழில் வணிக அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு – ஆரையம்பதி பாலமுனை பிரதேசத்தில் அமைக்கப்பட்ட புடைவை உற்பத்தி சம்பந்தமான பயிற்சியளித்தல் ,வடிவமைத்தல் மற்றும் சாயமிடல்; சேவைகள் நிலைய திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்….
ஒரு காலத்தில் மாகாணங்களுக்கிடையிலான ஆட்சியில் பல்வேறு இன மத வேறுபாடுகள் காணப்பட்டன.முஸ்லிம் சகோதரர்கள் பள்ளிவாயலில் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்,தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்,அவர்களில் சிலர் காணாமல் ஆக்கப்பட்டார்கள்.
ஆனால் இன்று அவை இல்லாதொழிக்கப்பட்டு சமாதானம் மேலோங்கியுள்ள இவ்வேளையில் அவற்றை சீர்குலைக்க முயலும் இனவாத அரசியல் வாதிகளை ஒரு போதும் இந்த அளயில் அவற்றை சீர்குலைக்க முயலும் இனவாத அரசியல் வாதிகளை ஒரு போதும் இந்த அரசாங்கம் ஏற்றுக் கொள்ளமாட்டாது.
இன்று வடக்கு கிழக்கு தெற்கு,சிங்களவர்கள்,முஸ்லிம்கள்,தமிழர்கள்,கிறிஸ்தவர்கள் என்ற எவ்வித வேறுபாடுமின்றி அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வட-கிழக்கு மக்கள் இழந்து இழப்புக்களை மீளப் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வேளையில் இனவாத அரசியல் பேசுபவர்களை முழுமையாக எதிர்த்து எம்மை நாம் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும்.
இந்துக்கள்,இஸ்லாமியர்கள்,சிங்களவர்கள்,கத்தோலிக்கர்கள் எல்லோரும் சமமாக ஓன்றாக நோக்கப்படுவதன் மூலம் சிறந்த கட்டமைப்புள்ள நாட்டை கட்டியெழுப்ப முடியும்.
கைத்தொழில் வணிக அமைச்சினூடாக வட கிழக்கு மாகாணங்களில் ஐந்து வருடத்திற்குள் 10இலட்சம் பேருக்கு தொழில்களை வழங்கவுள்ளோம்.
இதற்கு மக்களாகிய நீங்கள் வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்றுபட்டு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றார்.