Breaking
Sun. Dec 22nd, 2024

அஸ்ரப் ஏ சமத்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர்;; காலம் சென்ற எஸ்.வி. செல்வநாயகம் நினைவு தினப் பேச்சில் உரையாற்றினார்.

இந்த நாட்டின் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின் ஆட்சியில் முக்கியமானதொரு மாற்றம் நிகழ்ந்துள்ளது. சரித்திரத்திலேயே என்றும் இல்லாதவாறு ஒரு சர்ந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கின்றது. அதற்கு காரணம் என்னவென்றால் இரண்டு முக்கியமான தேசியக் கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளது. அவற்றோடு வேறு பல சிறு கட்சிகளும் அதற்கு ஆதரவாகப் செயல்படுகின்றன.

இந்த நாட்டில் யுத்தம் வென்றாலும் ஆனால் இன்னும் சமாதாணம் மலரவில்லை. ஆகவேதான் இந்த ஆட்சி மாற்றத்தில் நமது அதிகார பகிர்வில் இந்த சர்ந்தர்ப்பத்தை நாம் பயண்படுத்திக் கொள்ள வேண்டும். என சந்திரிக்கா பண்டார நாயக்க உரை நிகழ்ததினார்.

நேற்று (சனிக்கிழமை) பிற்பகல் பம்பலப்பிட்டி கதிரேசன்; மண்டபத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையின் ஏற்பாட்டில் தந்தை செல்வா நினைவு தினப் பேச்சு இடம் பெற்றது.. இந் நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் எஸ்.வி செல்வநாயகம் நினைவுப் பேருரையில் பிரதான உரையை நிகழ்த்தினார். கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, கொழும்புக்கிளையின் தலைவர் தவராஜா, பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் சட்டத்தரணி ராஜேந்திராவும் ; இங்கு உரை நிகழ்த்தினார்கள்.

இவ் வைபத்தில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு சந்திரிக்கா பண்டார நாயக்க உரைநிகழ்த்தினார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் –
நாம் இந்தச் சர்ந்தர்பத்தினை பயண்படுத்தி இதுவரைக்கும் நாங்கள் அடைய முடியாமல் இருந்த அதிகாரப் பகிர்வை அனைவரும் சம உரித்து, சம சர்ந்தர்ப்பம், ஏற்படுத்தி இந்த ஆட்சியின் அமைப்பின் ஊடாக நாட்டினை கட்டியெழுப்ப வேண்டும். இதன் மூலமாக இந்த இனப் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும்.

போரை மட்டும் நாம் வென்றாலும்,; நாட்டில் சமாதானம் மற்றும் சூபீட்சம் ஏற்படுத்துவதற்கு ஒரு வழியை நாங்கள் ஏற்படுத்துதல் வேண்டும். அதற்கான களநிலவரங்கள் மலர்ந்துள்ளன. அதனை தற்போதைய காலகட்டத்தில் நாம் முயற்சிக்க வேண்டும். இப்பொழுது அவ்வாறானதொரு சூழ்நிலையை ஏற்படுத்தி வருகின்றோம். இந்த நாட்டிலேயே பொருளாதாரம் ஓங்கி வரவேண்டும். ஏழ்மை, வறுமை, கல்வி முன்னேற்றம் அடைய வேண்டும். இந்த நாட்டில் நாம் மாற்றத்தினை ஏற்படுத்தி ஒரு சூபீட்சமாக வாழ அனைவரும் ஒன்ரு படல் வேண்டும். .

தந்தை செல்வா சிறுபான்மையினது உரிமைகளையும் ஆட்சி அதிகாரத்தினையும் பெற்றிட பல முயற்சிகளை செய்ததொரு தலைவர். செல்வா –பண்டாராநாயக்கா ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டார். அவர் இனங்களுக்கிடையில் ஜக்கியம், சம ஆட்சி அதிகாரத்தில் பல முயற்சிகளை செய்;தார். ஆனால் பௌத்த எதிர்கட்சிகளை இதனை செய்ய விடாமல் தடுத்தனர்.

இலங்கை சுதந்திரம் அடைந்ததில் இருந்து இனப்பிரச்சினை ஏற்பட்டது. 1956ஆம் ஆண்டு தனிச் சிங்களம் அரச மொழியாக உருவாக்கப்பட்டது. அதனால் சிறுபான்மை மொழிகள் புறக்கணிக்கப்பட்டன. இணைப்பு மொழியான ஆங்கிலமும் அதில் இருந்து வெளியே போகிவிட்டது. இந்த விடயத்திலும் எண்னிக்கையில் சிறுபான்மை மக்கள் நாட்டில் இணைத்துக் கொள்ளாமல் புறக்கணிக்கப்பட்டனர். இதன் புறக்கணிப்பு தொடர்ந்து இரண்டு கட்சிகள் காலத்திலும் நடைபெற்றன. இதனால் அரச தீர்வுகளை பெற்றுக் கொடுக்காமல் கட்சிகள் மாறி மாறி தட்டிக் கழித்தார்கள்.

நான் 1994 ல் ஜனாதிபதியாக ஆட்சிக்கு வந்தபோது 23வீத பௌத்த மக்கள் தான் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம.; என்ற நிலையில் இருந்தனர். ஏனைய வீதத்தினர் யுத்தித்தினாலேயே தீர்வு என்ற நிலையில் இருந்தனர். ஆனால் 2 வருடத்திற்குள் ‘வெந்தாமரை’ என்ற இயக்கம் அமைத்தேன்..

அதனுடாக பௌத்த மக்களிடையே ; பல அபிப்பிராயங்களை தெரிவித்து அம் மக்களை மாற்றியதனால் 68 வீத பௌத்த மக்கள் பேச்சுவார்த்தை முலம் முடிபு கானுங்கள் என மாற்றினேன். அரசின் தலைவர்கள் எதையாவது கொடுக்க நினைத்தால் அது மக்கள் மனதையும் நாம் மாற்றி அவர்கள் மனதையும் வென்றெடுக்க வேண்டும். அதற்காக அவர்களது அபிப்பிரயாம் மனப்பாங்கு மட்டுமல்லாமால் ஒருவர் மேல் மற்றெவருக்கு இருக்கின்ற சந்தேகத்தையும் பயங்களையும் நாம் மாற்ற வேண்டியதாகவும் இருக்கின்றது.

அரசியல் அதிகாரங்கள் மற்ற மக்களும் பயன்படுத்திகின்றபொழுதுதான் அது முழுமை பெறும். எனது காலத்தில் அதிகாரப் பகிர்வு திட்டத்தினைத் தான் நாம் வழங்க முற்பட்டோம். அந்த நேரத்தில் விடுதலைப்புலிகள் ஒரு பக்கமாக எதிர்த்தார்கள். இன்னொரு பக்கம் எதிர்கட்சியினர் அதனை எதிர்;த்தார்கள். இதனால் எனது காலத்தில் முன்னெடுக்கப்பட்ட தீர்வுத்திட்டம் நிறைவேற்றப்படாமல் போகிவிட்டது. எனவும் சந்திரிக்கா அம்மையார் அங்கு உரையாற்றினார்.

Related Post