Breaking
Fri. Nov 15th, 2024

சிவசேனாவை தீவிரவாத இயக்கமாக அறிவிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ‘சேனல்-92’ என்ற தனியார் தொலைகாட்சிக்கு சமீபத்தில் பேட்டியளித்த முஷாரப் கூறியதாவது:

நான் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. தலைமையிலான இந்திய அரசுகளுடன் பழகியுள்ளேன். என்னைப்பொருத்தவரை தற்போதைய கேள்வி கட்சிகளைப் பற்றியது அல்ல. ஆனால், தனிநபர் தொடர்பானது. இந்தியாவின் தற்போதைய புதிய பிரதமர் தொடர்பானது.

வாஜ்பாய் மிகவும் நல்ல மனிதர். அவர் நம்பிக்கைக்குரியவராக இருந்தார். சோனியா காந்தியும் அப்படிதான். அதனால்தான், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தை முன்னர் முன்னேற்றப்பாதையை நோக்கி சென்றது. ஆனால், பாகிஸ்தான் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான மனப்போக்கில் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டு வருகிறார்.

இந்தியாவில் இயங்கி வரும் சிவசேனா கட்சியை தீவிரவாத இயக்கமாக அறிவிக்க வேண்டும். சிவசேனாவின் நடவடிக்கைகளை ஐ.நா.சபை கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.  இவ்வாறு முஷாரப் கூறியுள்ளார்.

By

Related Post