Breaking
Wed. Oct 23rd, 2024

ஐதராபாத்தைச் சேர்ந்த எலக்ட்ரிக்கல் என்ஜினீயர் ஒருவர் தான் வேலைப்பார்த்த நிறுவனம் சம்பள பணத்தை கொடுக்காததால் ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் பணச்சிக்கலில் தனது திருமணத்தையே நிறுத்தியுள்ளார்.

ஐதராபத்தைச் சேர்ந்த முகமது அப்துல் காதீர் (வயது 30) என்பவர் துபாயில் உள்ள நிறுவனத்தில் எலக்ட்ரிக்கல் என்ஜினீயராக வேலைப்பார்த்து வருகிறார். அவருக்கு மாதச் சம்பளம் 6500 திர்ஹாம் (இந்திய மதிப்பில் ரூ. 1,13,644). ஆனால் கடந்த அக்டோபர் மாதம் கடைசியாக 3500 திர்ஹாம் சம்பளம் வாங்கினார். அதன்பின் அந்த நிறுவனம் அவருக்கு கடந்த 7 மாதமாக சம்பளம் கொடுக்கவில்லை.

இந்த நிலையில் காதீருக்கு ஐதராபத்தில் திருமணம் நிச்சயக்கப்பட்டு இந்த மாதம் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை அவரது குடும்பத்தினர் செய்து வந்த நிலையில், பணம் இல்லாததால் காதீர் தனது திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘எனக்கு இதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. அதனால் திருமணத்தை நிறுத்தினேன். எனது சம்பளம் குறித்து நிறுவனத்திடம் கேட்டபோது இரண்டு முறை கொஞ்சம் பணம் தந்தார்கள். அதன்பின் ஒரு காசுகூடத் தரவில்லை. சம்பள பணத்திற்கு காத்திருக்கும்படி கூறினார்கள்’’ என்றார்.

மேலும், எனது தங்கை திருமணத்திற்கு முன்பணமாக இந்தியாவில் உள்ள சில தனியார் நிறுவனத்திடம் இருந்து 6 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியுள்ளேன். கடன் கொடுத்தவர்கள் எனது தங்கை திருமணத்தையும் நிறுத்தி விடுவதாக மிரட்டுகிறார்கள் என்றார்.

சம்பளம் கொடுக்காத நிறுவனத்திற்கு எதிராக தொழிலாளர் நீதிமன்றத்தில் கடந்த மாதம் 20-ந்தேதி மனு தாக்கல் செய்துள்ளார் காதீர்.

Related Post