Breaking
Fri. Nov 15th, 2024

துபாயில் நவீன தானியங்கி மருத்துவ‌ பரிசோதனை நாற்காலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதில் அமர்ந்து இரத்த அழுத்தம், இதயதுடிப்பு உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை யாருடைய உதவியுமின்றி செய்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற துபாயில் நடைபெற்ற ஜிடெக்ஸ் தொழில்நுட்ப கண்காட்சியில் துபாய் சுகாதாரத்துறையின் சார்பில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த நவீன நாற்காலியில் அமர்ந்து 6 நிமிடங்களில் பரிசோதனை முடிவுளை பெற முடியும். நவீனமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நாற்காலியில் அமர்ந்து இரத்த அழுத்தம், இதய துடிப்பு, கூடுதல் எடை, உடல் சோர்வு என பல்வேறு உடல் பரிசோதனைகளை செய்து முடிவுகளை 3 பக்கங்களில் உடனடியாக அறிந்து கொள்ள முடியும்.

முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு இந்த ஆண்டு இறுதி துபாய் அரசு மருத்துவமனைகளில் நிறுவப்படும் வாய்ப்புள்ளதாக துபாய் சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இந்த நவீன கருவி நடைமுறைக்கு வரும் போது உடல் ரீதியான ஆரம்பகட்ட‌ பரிசோதனைகளுக்கு நீண்ட நேரம் காத்திருக்கும் சூழ்நிலை குறைவதோடு தனி மனித‌ உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .

By

Related Post