Breaking
Wed. Mar 19th, 2025
பல்வேறுபட்ட  திட்டங்களை நடைமுறைப்படுத்தி சமூக மறுமலர்ச்சிக்காக உழைத்துக்கொண்டிருக்கும் நிந்தவூர் நலன்புரிச்சபையின்  கிளை அண்மையில்  துபாயில்  அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
தலைவராக பொறியியலாளர் AL.சிராஜ் முகம்மது ,உபதலைவராக அல் ஹாபிஸ் AC அஸ்ரப், செயலாளர் AM.அச்சிமுகம்மது உப செயலாளர்      B.M.Y  நளீர் பொருளாளர், M.Y அன்வர்(சப்ரி) உட்பட இன்னும் அமீரகத்தின் பல்வேறு பிரதேசங்களுக்கு  இணைப்பாளர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.
இந்நிகழ்விலே  விசேட உரையாற்றிய NWC  இன் தலைவர் அல்ஹாஜ் யாகூப் ஹசன் அவர்கள் தனது உரையில்  “கல்வியினூடாக  முன்னேறி உலகளாவிய ரீதியில் நாம்  பரந்து வாழ்ந்தாலும் நமது தாய்நாட்டினையும் பிறந்த ஊரினையும்  ஒருபோதும் மறக்கக்கூடாது.இறைவனின் உதவியினால் நல்ல நிலைமையில்  வாழ்கின்ற நாம் எமது பிரதேசத்தில் வாழுகின்ற  ஏழை எளியவர்களது  நலனில் அக்கறைகொள்ளுதல்  வேண்டும்.அல்லாஹ்வுக்காக  எனும் நிய்யத்தில்  அவர்களுக்கு  நம்மால் முடிந்த வகையிலே  உதவுவதற்கு முன்வர வேண்டும்.அவ்வாறு நாம்  உதவும்போது  அல்லாஹ்  நமது வாழ்வில் இன்னும் அதிகமான  பரக்கத்துக்களை ஏற்படுத்துவான் எனக்கூறினார்.
இம்மாதம்  நடுப்பகுதியில்  கட்டார்,ஐக்கிய அரபு ராச்சியம் போன்ற நாடுகளின் NWC கிளைகளினை அங்குரார்ப்பணம் செய்யும்  பணி  வெற்றிகரமாக  நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

By

Related Post