Breaking
Wed. Dec 25th, 2024

பாலைவனத்தில் சோலைவனமாக துபாயில் துபாய் லேன்ட் பகுதியில் சூரிய சக்தியில் செயல்படும் சஸ்டைனபில் சிட்டி sustainable-city எனும் பசுமை நகரம் உருவாக்கப்பட உள்ளது. 50 லட்சம் சதுர அடியில் அமைய உள்ள இந்நகரத்தில்10 ஆயிரம் மரங்களோடு 500க்கும் மேற்பட்ட பசுமை வீடுகள்,பசுமை பள்ளி,ஆராய்ச்சி கூடம், அருங்காட்சியகம், சூரிய சக்தி நிலையம், விவசாய பண்ணைகள், புல் வெளிகள், கழிவுநீர் மறுசுழற்சி என 100 சதவீதம் சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட உள்ளது.

மேலும் புகழ் பெற்ற இண்டெர்காண்டினென்டல் ஹோட்டல் நிறுவனம் 170 அறைகளோடு இங்கு மிகபெரிய ஹோட்டலை 2017ல் இங்கு திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. 100 சதவீத சோலார் சக்தியில் இயங்கும் உலகின் முதல் ஹோட்டலாக திகழும் இங்கே உள்ள வாகனங்களும் சூரியஒளியில் இயங்கும். இப்பணிகள் நிறைவு பெறும் போது இப்பகுதி முழுவதும் பசுமையாக காணப்படும். துபாய் உலக மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்நகரம் மிக புதுமையாக அமையும் உலகில் உள்ள சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்வதோடு இன்றைய சுற்றுப்புற‌ சூழலுக்கு தேவையான நகரமாகும் என இத்திட்டத்தை செயல்படுத்தும் டயமண்ட் டெவலெப்பர்ஸ் தெரிவித்தனர்.

Related Post